கொடைக்கானல்: கொடைக்கானலில் டோலி கட்டி மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்ட பெண் உயிரிழந்தார். சின்னூர் காலனியை சேர்ந்த மாரியம்மாள் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். சின்னூர் மலை கிராமத்தில் இருந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை 5 கி.மீ. தூரம் டோலி கட்டி தூக்கிச் சென்றனர். டோலி கட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாரியம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாரியம்மாள் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.