லக்னோ: உத்தரப்பிரதேசம் லக்னோவில் கோம்தி நகர் பகுதியில் தாஜ் ஓட்டல் அருகே நேற்று முன்தினம் மழைநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் இந்த நீரில் சிக்கினார்கள். பைக்கை ஓட்ட முயன்றபோது அங்கு வந்த கும்பல் பைக்கை பின்னால் இழுத்தது. அவர்கள் மீது தண்ணீரை தெளித்தது.
இதனால் பைக்கில் அமர்ந்து இருந்த பெண் நிலைதடுமாறி தேங்கியிருந்த வெள்ளநீரில் விழுந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து தாமாக முன்வந்து இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அலட்சியத்துடன் செயல்பட்டதாக உள்ளூர் காவல்நிலைய பொறுப்பு அதிகாரி உட்பட 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.