கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த மருத்துவமனைக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை(சிஐஎஸ்எப்) பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, உடனடியாக மத்திய தொழில் பாதுகாப்பு படையின் உயர் அதிகாரிகள் குழு நேற்று மருத்துவமனைக்கு விரைந்தது. அங்கு பாதுகாப்பு பணி மேற்கொள்ளும் மாநில போலீசார் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திடம் சிஐஎஸ்எப் குழு ஆலோசனை நடத்தியது.