Sunday, February 25, 2024
Home » டெல்லி கோயில் நிகழ்ச்சியில் மேடை சரிந்து பெண் பலி

டெல்லி கோயில் நிகழ்ச்சியில் மேடை சரிந்து பெண் பலி

by Ranjith

புதுடெல்லி: டெல்லியில் கோயில் நிகழ்ச்சியில் மேடை சரிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்தார். 17 பேர் படுகாயமடைந்தனர். டெல்லி, கல்காஜி கோயிலில் நேற்று முன்தினம் இரவு ஆன்மிக நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மற்றும் விஐபிக்கள் அமர்வதற்கு பெரிய மேடை அமைக்கப்பட்டு இருந்தது.

நள்ளிரவு 12.30 மணியளவில் பஜனை நடந்து கொண்டிருந்த போது மேடை திடீரென சரிந்தது. மேடைக்காக அமைக்கப்பட்டு இருந்த பலகைகள் கீழே அமர்ந்திருந்தவர்களின் மீது விழுந்தது. மேடையில் இருந்தவர்களும் அவர்கள் மீது விழுந்தனர். இதனால் அங்கு கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஒரு பெண் பலியானார். 17 பேருக்கு காயம் ஏற்பட்டது.

You may also like

Leave a Comment

five × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi