புதுடெல்லி: பெண்களை இழிவுபடுத்தும் அநீதியான சொற்களுக்கு மாற்று சொற்கள் அடங்கிய பாலின விதிமுறைகள் கையேட்டை உச்ச நீதிமன்றம் நேற்று வெளியிட்டது. பாலின ரீதியில் அநீதியான சொற்கள் மற்றும் சொற்றொடர்களின் சொற்களஞ்சியம் அடங்கிய கையேட்டை உச்ச நீதிமன்றம் அட்டவணை வடிவில் நேற்று வெளியிட்டது. இது நீதித்துறை உத்தரவுகள் மற்றும் தீர்ப்புகளில் பயன்படுத்துவதற்கான மாற்று வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளின் பட்டியல் பின்வருமாறு:
கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண்: திருமணத்திற்கு வெளியே உடலுறவில் ஈடுபட்ட பெண்.
தகாத உறவு: திருமணத்திற்கு மீறிய உறவு
உயிரியில் ரீதியாக ஆண்/ பெண்: பிறப்பின்போது கண்டறியப்பட்ட பாலினம்.
பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட குழந்தை: கடத்தப்பட்ட குழந்தை
சின்ன வீடு: திருமணத்துக்கு பிறகு ஒரு ஆண் காதல் அல்லது பாலியல் உறவு கொண்ட பெண்
ஈவ் டீசிங்: தெருவில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்
தவறிழைத்த பெண்: பெண்
பெண்களுக்கான சுகாதார பொருட்கள்: மாதவிடாய் பொருட்கள்
வலுகட்டாய பலாத்காரம்: பலாத்காரம்
பாலியல் பெண்: பெண்
இந்திய பெண்/மேற்கத்திய பெண்: பெண்
பெண் போன்ற: நடத்தை அல்லது குணாதிசயங்களின் பாலின நடுநிலை விளக்கத்தைப் பயன்படுத்தவும் (எ.கா. வேடிக்கையான அல்லது உறுதியான)
சோம்பேறி/வேலை செய்யாமல் இருப்பவர்: வேலையற்றவர்
திருமண வயது: திருமணம் செய்யத் தேவையான சட்டப்பூர்வ வயதை அடைந்த பெண்
விபச்சாரி: பாலியல் தொழிலாளி
கிளர்ச்சியூட்டும் ஆடை: ஆடை
வயதான பெண்/முதிர்கன்னி: திருமணமாகாத பெண்
உயிர் பிழைத்தவர் அல்லது பாதிக்கப்பட்டவர்: பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் தங்களை “உயிர் பிழைத்தவர்” அல்லது \\”பாதிக்கப்பட்டவர்\\” என்று அடையாளப்படுத்திக் கொள்ளலாம். தனிநபர் ஒரு விருப்பத்தை வெளிப்படுத்தாத வரை இரண்டு விதிமுறைகளும் பொருந்தும்.
அத்துமீறல் (எ.கா. அவர் அவளிடம் அத்துமீறினார்): பாலியல் துன்புறுத்தல்/தாக்குதல் அல்லது கற்பழிப்பு
ஒழுக்கம் கெட்டவள் : பெண் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.