விழுப்புரம்: கண்டமங்கலம் அருகே கரும்பு தோட்டத்தில் கழுத்தில் காயங்களுடன் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 45-வயதான மலர் என்பவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குடும்பத் தகராறில் கணவரே கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.