மும்பை: பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த மும்பை பெண்ணை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், ‘பிரதமர் மோடியைக் கொல்லும் திட்டம் தயாராக உள்ளது’ என்று தெரிவித்துவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். எதிர்முனையில் பேசிய பெண்ணின் செல்போன் எண்ணைக் கொண்டு அவரது இருப்பிடத்தை அறிந்த போலீசார், அம்போலி பகுதியில் வசிக்கும் 34 வயது பெண்ணை கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், அந்தப் பெண் மனநிலை சரியில்லாதவர் என்பது தெரியவந்தது. மேலும் அந்தப் பெண்ணுக்கு எந்தக் குற்றப் பின்னணி இல்லை என்றும், இருப்பினும், இந்த வழக்கு விசாரணையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அந்தப் பெண்ணின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆறு ஆண்டுகளில் பிரதமர் மோடிக்கு மூன்று கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக உயர் போலீஸ் அதிகாரிகள் கூறினர்.