வாஷிங்டன்: சைக்கிள் பயணம் மேற்கொண்டு உலகின் மிகப்பெரிய GPS ஓவியம் வரைந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார் அமெரிக்காவை சேர்ந்த க்றிஸ்ட்டி பெல்மர். மறைந்த தனது செல்ல நாயின் நினைவாக இந்த சாதனையை படைத்துள்ள க்றிஸ்ட்டி, சுமார் 4,707 கிலோ மீட்டர் தூரம் ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகள் வழியே சைக்கிளில் பயணித்துள்ளார். இவர் வரைந்த அந்த ஓவியமும் அவரின் நாயை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.