எட்டயபுரம்: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி நடுக்கரை தெருவைச் சேர்ந்த அசோகன் மனைவி அன்புராணி (55). உடன்குடி பேரூராட்சி 8வது வார்டு கவுன்சிலரான இவர், நேற்று மருத்துவ பரிசோதனைக்காக மகன் நேரு (31), மருமகள் இந்து (28) ஆகியோருடன் ஒரு காரில் உடன்குடியிலிருந்து அதிகாலை புறப்பட்டு மதுரைக்கு சென்றனர். காரை இவரது மகன் நேரு ஓட்டினார். எட்டயபுரம் அருகே மேலக்கரந்தை அடுத்து தனியார் காற்றாலை நிறுவனம் அருகே சென்றபோது, முன்னாள் தண்ணீர் ஏற்றிச் சென்ற டேங்கர் டிராக்டரை முந்திச் செல்ல முயன்ற போது டேங்கர் மீது கார் மோதியது. இதில் அன்புராணி பலியானார். மற்றவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
டிராக்டர் மீது கார் மோதி பெண் கவுன்சிலர் பலி
0