சென்னை: உலக கோப்பை இறுதிப்போட்டியில் அகமதாபாத் மைதானத்தில் இருந்த ரசிகர்களின் செயல்பாடு சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. இந்திய வீரர்களை அவர்கள் உற்சாகப்படுத்த தவறிவிட்டதாகவும் குற்றசாட்டுகள் எழுந்துள்ளன. உலகக்கோப்பை தொடரில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திவந்தது இந்திய அணி கோலி, ரோகித்,ஷமீம் போன்ற சிறந்த வீரர்கள் அணியிலுப்பதை தாண்டி சொந்த மண்ணில் தொடர் நடைபெறுவது இந்திய அணிக்கு பெரும் பலமாக இருந்தது. இந்தியா என்றில்லை எந்த அணியாக இருந்தாலும் சொந்த மண்ணில் விளையாடினால் ஆட்டத்தில் அவர்களின் கை ஓங்கியே இருக்கும்.
எனவே இறுதி பொடியை இந்திய அணி எளிதாக வென்றுவிடும் என அனைவரும் நம்பினர். ஆனால் ஆஸ்திரேலியா ஆதிக்கத்தை காட்டி உலக கோப்பையை தட்டி சென்றது. அவர்களது வெற்றியில் மிக முக்கியமான ஒன்று ஒரு லட்சத்திற்கும் அதிகமான இந்திய ரசிகர்கள் முன்னிலையில் கோப்பையை வென்றுள்ளது தான். அத்தனை பேர் சூழ்ந்திருந்தும் இந்திய அணி துவண்டபோது அவர்களை ஊக்குவிக்கும் வகையில் உற்சாகமான குரல்கள் ரசிகர்கள் மத்தியிலிருந்து வரவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆஸ்திரேலியா பேட்டிங்கை தொடங்கி 10 ஓவருக்குள் 3 விக்கெட்களை இந்திய அணி வீழ்த்தி அவர்களை கட்டுப்படுத்தியது. ஆனால் அப்போதுகூட அகமதாபாத் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் உற்சாகமாகவில்லை ஆட்டத்திற்கு இடையே கூட்டத்தை நோக்கி முழக்கமிடுங்கள், கைதட்டுங்கள், உற்சாக படுத்துங்கள் என கோலியே கேட்டுக்கொண்டிருந்தார்.
ஆனால் செல்போனை பார்ப்பதிலும் செல்பி எடுப்பதிலும் தான் அங்கிருந்த பெரும்பாலானோர் கவனமாக இருந்தனர். சிலர் தூங்கிவிட்ட கட்சிகளும் பரவி வருகிறது. மும்பை ஈடன் கார்டன் போன்ற மைதானங்களில் போட்டி நடந்திருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கக்கூடிய வாய்ப்பு இருந்திருக்கும் என சில இணையவாசிகள் வருத்தத்துடன் குறி வருகின்றனர். சென்னை போன்ற நகரங்களில் நடக்கும் போட்டியில் இந்தியாவே விளையாடவில்லை என்றாலும் மற்ற அணிக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தும் கிரிக்கெட் ரசிகர்கள் இருப்பதாகவும் பலர் பதிவிட்டு வருகின்றனர். உலகின் மிக பெரிய மைதானம் என்ற பெருமைக்காக சரியான பிட்சை தேர்வு செய்யாமல் ரசிகர்களுக்கு பதிலாக பெரும்பாலும் பிரபலங்களை மற்றும் அழைத்து இந்த போட்டி நடத்தப்பட்டுள்ளது என்றும் இந்த சூழ்நிலையில் ஒரு கிரிக்கெட் பொடியை இப்படி தான் பார்க்க வேண்டும் என்பதை அவர்களிடம் எதிர்பார்க்க முடியுமா என்றும் பலர் விமர்சித்து வருகின்றனர்.
இந்திய அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பு நழுவ தொடங்கியதும் ஆஸ்திரேலிய அணி வெற்றி இலக்கை எட்டுவதற்குள்ளாகவே அந்த மைதானத்திலிருந்து ரசிகர்கள் வெளியேறிவிட்டனர். வெறும் 20 சதவீத ரசிகர்களுக்கு முன்பு தான் ஆஸ்திரேலியா கோப்பையை வாங்கியது. ஆனால் சென்னையின் மெரினா, பெசன்ட் நகரில் எல்.ஈ.டி திரையில் உலகக்கோப்பையை பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களோ கடைசிவரை நின்று போட்டியை பார்த்ததாக அவர்களுக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். குறிப்பாக சமீ, பும்ராவின் பந்து வீச்சுக்கு மட்டுமல்லாமல் டிராவிஸ் எட்யின் சாதத்திற்கும் சென்னை ரசிகர்கள் பாராட்டி கைதட்டினர். அகமதாபாத் மைதானத்திலிருந்த ரசிகர்கள் மட்டுமல்ல பிரதமர் மோடியே அப்படித்தான் நடந்து கொண்டதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸிடம் கோப்பையை வழங்கிய பின் பிரதமர் மோடி மேடையை விட்டு இறங்கிய போது என்ன செய்வது என்று தெரியாமல் முழிப்பதை போல் பாட் கம்மின்ஸ் தனியாக மேடையின் மீது நின்றிருந்தார். வெற்றி பெற்ற அணியின் கேப்டனை கௌரவிக்கும் விதம் இதுதானா என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இறுதி போட்டி மட்டுமல்ல பாகிஸ்தான் ரசிகர்களை அவமதித்தது மதரீதியான முழக்கம் என தொடர் முழுக்க அந்த மைதானத்தில் நடந்த பல சம்பவங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. எனவே கிரிக்கெட்டை ரசிக்கும் கிரிக்கெட் வீரர்களை கொண்டாடும் ஸ்போர்ட்ஸ் ஸ்பிரிட் உடன் உற்சாகமான சூழலை உருவாக்கும் மைதானத்தில் இது போன்ற முக்கியமான போட்டிகளை நடத்த வேண்டும் என்றும் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.