டெல்லி: குற்றம் சாட்டப்பட்டாலே வீடுகளை இடிப்பீர்களா? என காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. புல்டோசர்கள் வைத்து வீடுகளை இடிக்கும் விவகாரத்தில் நாடு முழுவதும் ஒரு சட்டம் வகுக்கப்படும் என பல்வேறு மாநிலங்களில் இருந்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ‘ஜாமியா உலேமா இந்த் உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் காவல்துறைக்கு கேள்வி எழுப்பியுள்ளது. புல்டோசர் நடவடிக்கை குறித்த வழக்கு விசாரணை மீண்டும் செப்.17ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.