புதுடெல்லி: இந்தியாவின் மிகவும் புகழ் பெற்ற வனவிலங்கு பாதுகாவலரான வால்மிக் தப்பார் நேற்று காலமானார். அவருக்கு வயது 73. இந்தியாவின் டைகர் மேன் என்று அழைக்கப்பட்ட அவர் டெல்லியில் கடந்த 1952ம் ஆண்டு பிறந்தார். தி டூன் பள்ளியில் பயின்றார். பின்னர் டெல்லி பல்கலை கழகத்தின் செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் சமூகவியல் பட்டப் படிப்பு பயின்ற வால்மிக் தப்பார், சிறு வயது முதலே புலிகளை பற்றி படிப்பது, ஆராய்ச்சி செய்வதில் மிகவும் ஈடுபாட்டுடன் இருந்தார்.
ராஜஸ்தான் மாநிலம் ரந்தோம்போர் தேசிய பூங்காவில் உள்ள புலிகளுக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்தார். வாழ்நாள் முழுவதும் புலிகள் பாதுகாப்பு, இயற்கை வாழ்விடங்கள் பாதுகாப்பு தொடர்பாக வலியுறுத்தி வந்த வால்மிக் தப்பார் சில தினங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் தனது 73வது வயதில் நேற்று காலமானார்.