Tuesday, July 23, 2024
Home » இதுதானா உங்க டக்கு என சேலம்காரரின் முடிவை கிண்டல் செய்யும் தேனிக்காரரின் அணி பற்றி சொல்கிறார் wiki யானந்தா

இதுதானா உங்க டக்கு என சேலம்காரரின் முடிவை கிண்டல் செய்யும் தேனிக்காரரின் அணி பற்றி சொல்கிறார் wiki யானந்தா

by Suresh

‘‘கடலோர பகுதியில் பல கோடி மதிப்பில் சிக்கிய கஞ்சா விவகாரத்தில் வியாபாரிடம் ‘20 எல்’ சுருட்டி பங்குபோட்டதா காக்கிகள் மீதே குற்றச்சாட்டு வருதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்டத்தில் தனிப்படை காக்கிகள் நடத்திய வாகன சோதனையின் போது பல கோடி மதிப்பிலான கஞ்சா சிக்கியதாம்.. இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான கஞ்சா வியாபாரியை வழக்கில் சேர்க்காமல் இருப்பதற்காக அவரிடம் கடவுளின் பெயரை கொண்ட அதிகாரி ஒருவர் நேரிடையாகவே டீல் பேசியிருக்காரு.. இதில், அவர் நினைத்த மாதிரி எந்த பிரச்னையும் இல்லாமல் டீல் ஓகே ஆனதும் அந்த கஞ்சா வியாபாரிடம் ‘20 எல்’ வரை வாங்கி இருக்காராம். இந்த டீல் விவகாரம் வெளியில் கசியாமல் இருக்க ரகசிய இடத்தில் வைத்து அவற்றை தனிப்படை காக்கிகள் பங்கு போட்டு பிரித்து கொண்டாங்களாம். இந்த விவகாரம் வெளியில் எப்படியோ கசிந்ததால் நகரில் உள்ள காவல் நிலைய காக்கிகள் மத்தியில் பரவலாக பேச்சு அடிபடுகிறது. இந்த டீல் விவகாரம் உயரதிகாரி கவனத்துக்கும் எப்படியோ சென்றதால் தனிப்படை காக்கிகள் கிலியில் உள்ளார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘துணைவேந்தரையே மிஞ்சுற அளவுக்கு ஆட்டம் போடும் பல்கலை லேடி அதிகாரி பற்றி தெரியுமா…’’ என அடுத்த கேள்விக்கு தாவினார் பீட்டர் மாமா.

‘வெயிலூர் மாவட்டத்துல திருக்குறள் எழுதியவரோட பெயர்ல சேர் காடான பகுதியில, பல்கலைக்கழகம் இயங்கி வருது.. இங்க மதுரை அம்மன் பெயர் கொண்ட லேடி அதிகாரி பணிபுரிஞ்சு வர்றாங்களாம்.. அந்த பல்கலைக்கழகத்துல எது நடந்தாலும் இவங்க பர்மிஷன் இல்லாம நடக்குறதில்லையாம்.. அதாவது துணை வேந்தரை மிஞ்சுற அளவுக்கு பல்கலைக்கழகத்துலயே அந்த லேடி அதிகாரியோட ஆட்சிதான் நடக்குதாம்.. அவங்களை எதிர்த்து ேகள்வி கேட்டா அவங்க நிலைமை அவ்வளவுதானாம்.. பல வருஷமா அந்த பல்கலையிலேயே பணிபுரிஞ்சு வர்றாங்களாம்.. அதனால அவங்களுக்கு எல்லாம் அத்துப்படியாம்.. இங்கே எல்லாம் நான்தான், என்னை மீறி எதுவும் செய்திட முடியாதுன்னு கூறியபடி ஆட்டம் ேபாட்டு வரும் லேடி அதிகாரிக்கு யார் தான் மணி கட்டப்போறாங்களோ ெதரியலைன்னு, அனைத்து டிபார்ட்மென்ட் அதிகாரிங்க, அலுவலக பணியாளருங்க புலம்பி வர்றாங்களாம்.. பெரிய அளவுல எதுவும் நடக்குறதுக்கு முன்னாடி சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிங்க விசாரிச்சு உடனே நடவடிக்கை எடுக்கணும்னு விஷயம் தெரிஞ்சவங்க சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ரோந்து பைக்கில் சிக்கிய ஊசி மருந்துபற்றி கண்டுகொள்ளாம விடுவித்த விவகாரம் காக்கிகளுக்கு பெரும் தலைவலியை உண்டாக்கி இருக்கிறதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘கடைகோடி மாவட்டத்தில் கோவில் என முடியும் ஊரு அருகே கடந்த இரு நாட்களுக்கு முன் ரோந்து பணியின்போது பைக்கில் வந்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்து இருக்காங்க.. முன்னுக்குப்பின் முரணாக பேசியதால், பைக்கில் சோதனை செஞ்சாங்களாம்.. அதில் ஏராளமான ஊசி மருந்துகள் இருந்துருக்கு.. தற்போது போதைக்காக இதுபோன்ற ஊசி மருந்துகளை இளைஞர்கள் பயன்படுத்தும் நிலையில், அதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த போலீஸ், பைக்கை காவல் நிலையத்துக்கு கொண்டு போயிட்டாங்களாம்.. போலீஸ் ஸ்டேஷனுக்கு போன பிறகு தான், அந்த பைக் அரசியல் கட்சி பெண் நிர்வாகி தம்பிக்கு சொந்தமானதுனு தெரிஞ்சு இருக்கு.. அந்த பெண் நிர்வாகி, சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் அதிக செல்வாக்கு படைத்தவராம்.. பைக்கை பிடிச்ச தகவல் அறிந்ததும் தடாலடியாக யாருக்கோ போன் போட்டு பேச, கொஞ்ச நேரத்தில் பைக்கை போலீசு விடுவிச்சு இருக்கு. மேற்கொண்டு பிரச்னை வராமல் இருக்க ஓவர் ஸ்பீடு, நம்பர் பிளேட் முறையாக இல்லாத பிரிவுகளின் கீழ் அபராதம் விதிச்சு ரசீதும் கொடுத்து அனுப்பி இருக்காங்க.. ஊசி மருந்துகள் இருந்த விவகாரத்தை ஏன் கண்டுகொள்ளவில்லைனு தற்போது சமூக வலைதளங்களில் பலர் கேள்வி கேட்க, இந்த விவகாரம் உயர் அதிகாரிகள் வரைக்கும் போய் இருக்காம்.. அபராதம் விதிச்சீங்க சரி.. ஊசி மருந்துகள் இருந்ததை ஏன் கண்டுகொள்ளாம விட்டீங்கன்னு உயர் அதிகாரிகள் கேள்வி கேட்க, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் இருப்பவர்கள் கப்சிப் ஆயிட்டாங்களாம்.. ஏற்கனவே காவல் நிலைய போலி சான்றிதழ் விவகாரத்தில், இந்த காவல் நிலையம்தான் பிரச்னைக்கு உள்ளாகி இருக்காம்.. இப்போது ஊசி மருந்து, பைக் விவகாரமும் சிக்கல் ஏற்படுத்தி இருக்கிறதா பேசிக்கிறாங்க.. உண்மை தன்மை என்னன்னு விசாரிக்க உயர் அதிகாரி உத்தரவு போட்டு இருக்கிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தேர்தல் தோல்வி பற்றி தொகுதிவாரியா ஆலோசனை நடத்தப்போறாராமே சேலம்காரர்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு மாதத்திற்கும் மேல் ஆகிறது. 40 தொகுதிகளிலும் ஒரு தொகுதியில் கூட இலை கட்சியால் வெற்றி பெற முடியவில்லை. அது மட்டுமல்லாது சில இடங்களில் தேசிய கட்சி 2ம் இடத்தை பிடித்து இலை கட்சியை 3ம் இடத்திற்கு தள்ளியது. எனினும் தோல்விக்கான காரணம் என்ன என்பது குறித்த கூட்டத்தை சேலம்காரர் உடனடியாக கூட்டவில்லை. இதனால் அல்வா உள்ளிட்ட தென் மாவட்ட இலை கட்சியினர் மனம் வெதும்பிப் போய் இருந்தனர். காரணம் இலை கட்சி அல்வா மாவட்டத்தில் 3ம் இடத்தை தான் பிடித்தது. குமரி மாவட்டத்தில் 4ம் இடத்திற்கு தள்ளப்பட்டது. சேலம்காரரிடம் இருந்து மக்களவைத் தேர்தலுக்கு பின் எந்த ரெஸ்பான்சும் இல்லாததால் இலை கட்சியினர் புலம்பி வந்தனர்.

இந்நிலையில் ஒரு மாதத்திற்கு பின்னர் சேலம்காரர் இலை கட்சியின் தோல்வி குறித்து ஆலோசிக்க ‘சாட்’ போட்டுள்ளார். ஏற்கனவே வாக்குப்பதிவு முடிந்து 3 மாதமாகிறது. ரிசல்ட் வந்து ஒரு மாதம் ஆகிறது. தோல்வியை மறந்து கட்சியினர் தற்போது தான் வெளியில் தலை காட்டி வருகின்றனர். இப்போது தான் ஆலோசனை கூட்டமாக என தென் மாவட்ட இலை கட்சியினர் நொந்து போய் உள்ளனர். கட்சித் தலைமை அப்படி இருக்குது…..இதுதானா உங்க டக்கு..எல்லாம் லேட்டா தான் வரும் என தேனிக்காரர் அணியினர் இலை கட்சியினரிடம் நகைப்பு காட்டுகின்றனர்..’’ என்றார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

2 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi