தார்: மத்தியபிரதேசத்தில் கடன் பணத்துக்காக மனைவியை நண்பருக்கு விற்ற கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மத்தியபிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் இருந்து சுமார் 35 கிமீ தொலைவில் உள்ள கன்வான் காவல்நிலைய பகுதியில் ஒருவர் வசித்து வருகிறார். இவரது மனைவி இந்தூரில் வசித்து வருகிறார். குறிப்பிட்ட அந்த நபருக்கு சூதாடும் பழக்கம் இருந்ததால், நிறைய நண்பர்களிடம் கடன் வாங்கி விட்டு திருப்பி தராமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் ரூ.50,000 கடன் பணத்தை திருப்பி கேட்ட நண்பருக்கு பணம் தர முடியாத காரணத்தால் தன் மனைவியை அந்த நண்பருக்கு விற்றுவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கன்வான் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், பெண்ணின் கணவர், அவரது நண்பர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.