கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர் மசினகுடியை அடுத்த வாழைத்தோட்டம் சாய்ராம் நகர் பகுதியில் வசித்தவர் தினேஷ்குமார் (35). இவரது மனைவி கார்த்தியாயினி (34). கூலித் தொழிலாளியான தினேஷ்குமார் கடந்த சனிக்கிழமை மாலை வேலைக்கு சென்று போதையில் வந்தார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் தினேஷ்குமாரின் கழுத்தை கார்த்தியாயினி நெரித்தார். இதில் அவர் மயங்கி விழுந்தார். மசினகுடி போலீசார் வந்து தினேஷ்குமாரை மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது அவர் இறந்தது தெரியவந்தது. இதனையடுத்து கார்த்தியாயினியை போலீசார் கைது செய்தனர்.
கழுத்தை நெரித்து கணவரை கொன்ற மனைவி கைது
0