காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டி அருகே அச்சம்பட்டியை சேர்ந்தவர் நாகேந்திரன் (60). மனைவி கஸ்தூரி (52). மாடி வீட்டில் வசித்து வருகின்றனர். மகன், மகள் திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனர். தம்பதியினரிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று அதிகாலை மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த நாகேந்திரன், கஸ்தூரி மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துள்ளார். இதில், தீக்காயம் அடைந்த மனைவி சம்பவ இடத்திலேயே பலியானார். அப்போது நாகேந்திரன் மீதும் தீப்பற்றியது. இதையடுத்து அவர் வீட்டின் மாடியிலிருந்து குதித்தார். இதில் படுகாயமடைந்த அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், குடும்ப பிரச்னை காரணமாக மனைவியை எரித்து, கொன்று விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என நாகேந்திரன் திட்டமிட்டுள்ளார். எதிர்பாராவிதமாக தீப்பற்றியதால் பதற்றத்தில் வீட்டின் மாடியிலிருந்து குதித்தது தெரிய வந்துள்ளது.
மனைவியை எரித்துக் கொன்று மாடியில் இருந்து குதித்த முதியவர்
0