புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை நேற்று அளித்த பேட்டி: நடிகை கவுதமியின் சொத்து பாதுகாக்கப்பட வேண்டும். பெண்கள் அரசியலில் ஊக்கப்படுத்தப்பட வேண்டும். கவுதமியை பொறுத்தவரை பந்தா இல்லாமல் பணியாற்றுபவர், அவர் பிரச்னை தீர்க்கப்பட்டு இருக்கலாம். என்னிடம் அவரது பிரச்னை வரவில்லை. அவர் கஷ்டப்படுகிறார், துன்பப்படுகிறார், நீதி கிடைக்கவில்லை என்பது எனக்கு தெரியாது. தெரிந்திருந்தால் உதவி செய்திருப்பேன். கரு.அழகப்பனை எனக்கு தெரியாது. அவர் கோயில், கோவிலாக செல்பவர் என்னை வந்து பார்த்தார். அதை தவிர வேறு இணைப்பு எதும் இல்லை. இவ்வாறு அவர கூறினார்.