சென்னை: நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரை 2012ம் ஆண்டே வாபஸ் பெற்ற நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான வழக்கை நிலுவையில் வைத்திருந்தது ஏன் என விளக்கம் அளிக்க காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 26ம் தேதிக்கு தள்ளிவைத்தார். சீமானுக்கு எதிராக கடந்த 2011-ல் நடிகை விஜயலட்சுமி சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.