பெரும்பாலும் பூஜைகளை ஒரு மண்டலம் செய்கிறார்கள். சில கோரிக்கைகள் நிறைவேறுவதற்காக இத்தகைய பூஜைகள் செய்யப்படுகின்றன. ஐயப்பன் விரதம் 48 நாட்கள் அல்லது ஒரு மண்டலம் கடைபிடிக்கப்படுகிறது. கோயில் கும்பாபிஷேகம் முடிந்த வுடன் 48 நாட்கள் தொடர்ந்து கோயிலில் மண்டல பூஜை நடைபெறுகிறது. 48 நாட்கள் என்பது என்ன கணக்கு?
நவக்கிரகங்கள் 9ம், ராசிகள் 12, நட்சத்திரங்கள் 27 ஆக மொத்தம் 48ம் நம் வாழ்வின் நிகழ்வுகளுக்கு காரணமாக இருப்பதாக ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இவை நம் வாழ்வில் துணை செய்யவேண்டுமென்று கருதியே 48 நாட்கள் ஒரு மண்டலமாகக் கணக்கிட்டு பூஜைகள் செய்கிறோம். ஒரு மண்டல பூஜைகள் மிகவும் அதிக பலனைத் தரும்.
இந்த மண்டல பூஜை எந்த தெய்வத்திற்குச் செய்யப்படுகிறதோ அந்த தெய்வத்தை 48 நாட்களும் ஆராதிப்பதுடன், அந்த தெய்வத்துடன் நம் மனம் ஒன்ற வேண்டும். எந்நேரமும் அத்தெய்வச் சிந்தனையிலேயே இருக்க வேண்டும். அந்த தெய்வம் எழுந்தருளியுள்ள திருக்கோயில்களுக்குச் செல்லுதல், அத்தெய்வத்திற்குரிய மந்திரங்களை ஜபித்தல், பாடல்களைப் பாடுதல், போன்றவற்றைத் தொடர்ந்து ஒரு மண்டலம் செய்துவந்தால் அத்தெய்வத்தின் பரிபூரண அருள் கிடைக்கும். மனமொன்றிச் செய்யப்படும் பிரார்த்தனைகளுக்கு நிச்சயம் பலனுண்டு. ஆறு வாரங்கள் கோயிலுக்குச் செல்லுதல் என்பது இதற்காக ஏற்பட்டதுதான்.
எந்த கோரிக்கையாக இருந்தாலும் அது நிறைவேற தங்கள் இஷ்ட தெய்வத்தையோ, குலதெய்வத்தையோ இவ்வாறு ஒரு மண்டலம் பூஜிப்பதால் நிச்சயம் கோரிக்கைகள் நிறைவேறும். அந்த தெய்வத்தின் பரிபூரண அருள் கிடைக்கும்.தீமையில் நன்மையும், அவலட்சணத்தில் அழகையும், துன்பத்தில் இன்பத்தையும் காணக்கூடியவனிடம் அமைதி நிலவுகிறது. தீமையை எதிர்த்துப் போராடுங்கள். ஆனால் பகைமையை வளர்க்காதீர்கள்.காற்றுக்கு உலர்த்துவது தர்மம். நெருப்புக்குச் சுடுவது தர்மம். தண்ணீருக்கு நனைப்பது தர்மம். அதுபோல, மனிதனுக்கு கட்டுப்பாடுதான்
தர்மம்.
ஜி.ராகவேந்திரன்