Thursday, April 25, 2024
Home » தேர்தலில் யாருக்கு ஆதரவு? விக்கிரமராஜா பேட்டி

தேர்தலில் யாருக்கு ஆதரவு? விக்கிரமராஜா பேட்டி

by Ranjith

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஜிஎஸ்டியில் வணிகர்கள் முறையாக கணக்கு காண்பித்த போதும், லட்சக்கணக்கில் பாக்கி இருப்பதாக நோட்டீஸ் வருகிறது. மறு ஆய்வு செய்தால் எவ்வித பாக்கியும் இல்லை பூஜ்ஜியம் என்று வந்தாலும், இதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

இப்பிரச்னை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க விரைவில் தமிழக முதல்வரை சந்திக்க உள்ளோம். வணிகத்துறை என்பது ஒன்றிய அரசு கையில் உள்ளது. தமிழகத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வணிக வரி செலுத்த ஒரு மாத கால அவகாசம் கேட்ட போது, மாநில அரசினால் தர முடியவில்லை. ஒன்றிய அரசு மூலமாகத் தான் ஒரு மாத காலம் அவகாசம் பெற முடிந்தது. எனவே சட்டங்கள் என்பது ஒன்றிய, மாநில அரசுகள் பகிர்ந்து கொண்டால்தான் இடர்பாடுகளை களைய சரியாக இருக்கும்.

வணிக நிறுவனங்களில் அமலாக்கத்துறையினர் ரெய்டு செய்கின்றனர். அதற்கான ஆவணங்களை காண்பிக்க வேண்டும். ஒன்றிய, மாநில அரசுகள் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். கஞ்சா, போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கோரிக்கைகளை வாங்கியுள்ளனர்.

ஒன்றிய, மாநிலத்தில் ஆளும் கட்சிகள், எதிர்க்கட்சிகளிடம் எங்களின் கோரிக்கைகளை கொடுத்துள்ளோம். எங்கள் கோரிக்கைகள், மாநாட்டு தீர்மானங்களை நிறைவேற்றி தருகிறோம் என்று யார் உறுதி அளிக்கிறார்களோ, அது குறித்து ஆலோசனை நடத்தி வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதனை தெரிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

 

You may also like

Leave a Comment

2 − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi