தேவையான பொருட்கள் :
வெள்ளை கொண்டைக் கடலை -200 கிராம்
கீரை 1 கட்டு (ஏதேனும் வகை கீரை)
உருளைக் கிழங்கு 150 கிராம்
வெங்காயம் 100 கிராம்
சீரகம்- ½ ஸ்பூன்
எண்ணெய் 200 கிராம்
பச்சை மிளகாய் 6
உப்பு தேவையான அளவு
செய்முறை:
கொண்டைக் கடலையை வேக வைத்து தண்ணீர் வடித்து பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், உப்பு சேர்த்து அரைத்து அத்துடன் வேக வைத்து மசித்த உருளைக் கிழங்கு, நறுக்கிய கீரை, வெங்காயம் சேர்த்து நன்கு பிசையவும். இப்போது சிறு சிறு வடிவங்களில் தட்டி கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கட்லெட்டை போட்டு எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான வெள்ளை கொண்டைக் கடலை கீரை கட்லெட் ரெடி.