Saturday, April 13, 2024
Home » சுற்றுலா வந்த இடத்தில் மாயமானவர் மீட்பு

சுற்றுலா வந்த இடத்தில் மாயமானவர் மீட்பு

by Dhanush Kumar

சிக்கமங்களூரு மாவட்டம், மூடிகெரே தாலுகா பாலூர் அருகே உள்ள வல்லவராயன் துர்கா மலைப்பகுதிக்கு சுற்றுலாவுக்கு மங்களூரை சேர்ந்த ஐந்து பேர் சென்றிருந்தனர். சுற்றுலா சென்றவர்கள் அங்கு அருகே உள்ள அருவிக்கு சென்றனர். அப்போது சுற்றுலா வந்த தனுஷ் என்பவர் மாயமாகியுள்ளார். உடன் இருந்தவர்கள் அவரை தேடியுள்ளனர். அவர் கிடைக்காததை அடுத்து பாலுர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் 3 பிரிவுகளாக பிரிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சுங்சாலே என்னுமிடத்தில் 700 அடி பள்ளத்தில் தனுஷ் தனிமையில் நின்றிருந்துள்ளார். அவரை மீட்ட போலீசார் மற்ற நண்பர்களுடன் அனுப்பிவைத்தனர். சுற்றுலா, ட்ரக்கிங் வருபவர்கள் இது போன்று யாரும் தனிமையில் செல்லக் கூடாது என அங்கு வந்த வனத்துறையினரும் பாலூர் போலீசாரும் எச்சரித்து உள்ளனர்.

You may also like

Leave a Comment

two × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi