தேவையானவை:
கோதுமை ரவை – 1 கப்,
பாசிப்பருப்பு – ½ கப்,
வெல்லம் – 2 கப்,
நெய் – ½ கப்,
முந்திரி, ஏலத்தூள் – ¼ டீஸ்பூன்,
பால் – 2 கப்.
செய்முறை :
ரவை, பருப்பு, இரண்டையும் தனித்தனியே சிறிது நெய் விட்டு வாசனை வரும்படி வறுத்து எடுக்கவும். பாசிப்பருப்பை தனியே மலர வேக வைத்து, அதிலுள்ள தண்ணீர் 1½ கப்
இருக்குமாறு வைத்துக்கொள்ளவும். அதில் பால் சேர்த்து கொதி வந்தவுடன் ரவையைச் சேர்த்து கிளறவும். ரவை வெந்தவுடன் வெல்லத்தை தட்டி சேர்த்து அடிப்பிடிக்காமல் கிளறவும். நெய்யில் முந்திரியை வறுத்து சேர்த்து ஏலப்பொடி தூவி இறுகி வந்தவுடன் இறக்கி சூடாக பரிமாறவும்.