டெல்லி: இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படும் வாட்ஸ் ஆப் செயலியை தடை செய்து உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மனுதாரரின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என கூறி மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. புதிய தகவல் தொழில்நுட்ப விதி கடைப்பிடிக்க தவறிய வாட்ஸ் ஆப் செயலுக்கு தடை விதிக்க உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்தார். கேரளத்தைச் சேர்ந்த ஓமனக்குட்டன் என்பவர் தாக்கல் செய்த மனு ஐகோர்ட்டில் தள்ளுபடியானதை அடுத்து சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் தனியுரிமை கொள்கையை மீறி சில நேரங்களில் பயனாளர்கள் பகிரும் தகவலை வாட்ஸப் நிறுவனம் சேமித்து கொள்கிறது. வாட்ஸாப் செயலியை ஆவணங்கள் பகிர்வதில் இருந்து பல பயன்பாடுகளுக்கு பயன்படுத்துவது ஆபத்து என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
வாட்ஸ் ஆப்-ஐ தடை செய்யக் கோரிய மனு தள்ளுபடி
0