
வாஷிங்டன்: சீனாவின் உளவு பலூன் ஒன்று கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் ராணுவ தளங்களை சுற்றி வந்து ரகசியமாக கண்காணித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, பிப்ரவரி 5ம் தேதி அமெரிக்க ராணுவம் அதனை சுட்டு வீழ்த்தியது. இந்நிலையில், எலக்ட்ரானிக் அலைவரிசை மூலம் அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் தளவாடங்கள் குறித்த ரகசியங்களை சீன உளவு பலூன் வேவு பார்த்து உடனடியாக சீனாவுக்கு அனுப்பி வைத்ததாக நேற்று முன்தினம் பென்டகன் குற்றம் சாட்டியிருந்தது. இந்நிலையில், எந்த மாதிரியான ராணுவ ரகசியங்களை உளவு பலூன் சீனாவுக்கு அனுப்பி வைத்தது என்பது குறித்து அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் ஆய்வு செய்து வருவதாக பென்டகனின் ஊடகப்பிரிவு துணை தலைவர் சப்ரினா சிங் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.