நன்றி குங்குமம் டாக்டர்
காலையில் நாம் முதன் முதலில் பருகுவது உடல் நிலையை பொறுத்தும், சூழ்நிலையை பொருத்தும்தான் இருக்க வேண்டும்.
*காலை எழுந்தவுடன் அரை மணி நேரத்திற்குள் 2 டம்ளர் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.
*தண்ணீருக்குப் பதிலாக முதல் நாள் இரவே வெந்தயத்தை ஊறவைத்து மறுநாள் வெறும் வயிற்றில் ஊறிய வெந்தயத்தை நீருடன் குடிக்கலாம்.
*அருகம்புல் சாறு அல்சர் நோயாளிக்கு ஏற்ற பானம். அருகம்புல்லை நாமே வீட்டில் அரைத்துச் சாறு எடுத்து வெந்நீருடன் பருகுவது நல்லது.
*வெள்ளைப்பூசணி சாறு குடித்தால் தொப்பை, ஊளைச் சதை குறையும். சிறிது மிளகுத்தூள், மஞ்சள்தூள் சேர்த்துக் கொண்டால் முழுபலன் பெறலாம்.
*இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து குடித்தால் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புக் குறையும். நுரையீரல் தொடர்பான நோய்களும் சரியாகும்.
*நெல்லிச்சாறு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பினை அதிகரிக்காது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சரும பாதுகாப்புக்கும், சிறுநீரகத் தொற்று நோய்களுக்கும் மிகவும் சிறந்தது.
* இளநீர் இயற்கை தந்த வரப்பிரசாதம். வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. உடலுக்கு குளிர்ச்சி தரும். உடலுக்கு தேவையான அனைத்து மினரல்களும் இதில் உள்ளது.
* பழைய சாதத்தில் சிறிது சீரகத்தை இட்டு வெந்நீரை ஊற்றி வைக்க வேண்டும். காலையில் இந்த நீராகாரத்தை அருந்துவதால் உடலுக்கு குளிர்ச்சியும், கார்போஹைட்ரேட் சத்தும் கிடைக்கின்றன.
– டி.லதா, நீலகிரி.