Thursday, June 19, 2025
Home செய்திகள் வெஸ்ட் இண்டீசுடன் டி20 போட்டி பட்டாசாய் வெடித்த பட்லர் இங்கிலாந்து அபார வெற்றி

வெஸ்ட் இண்டீசுடன் டி20 போட்டி பட்டாசாய் வெடித்த பட்லர் இங்கிலாந்து அபார வெற்றி

by Karthik Yash

செஸ்டர் லீ ஸ்டிரீட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி செஸ்டர் லீ ஸ்டிரீட் நகரில் நடந்தது. டாஸ் வென்ற ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடி 59 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்சர் விளாசி 96 ரன் குவித்து ஆட்டமிழந்தார். அதனால் மற்றவர்கள் குறைந்த ரன் எடுத்தாலும் இங்கிலாந்து 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 188 ரன் குவித்தது.

அதனையடுத்து 189 ரன் எடுத்தால் என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஆடத் தொடங்கினர். இங்கிலாந்து பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்தன. அந்த அணியில் அதிகட்சமாக எவின் லிவீஸ் 39, ரோஸ்டன் சேஸ் 24 ரன் சேர்த்தனர். வெஸ்ட் இ்ண்டீஸ் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 167 ரன் மட்டுமே எடுத்தது. அதனால் 21 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து முதல் வெற்றியை பதிவு செய்தது. அந்த அணியின் லியம் டவ்சன் 4, மேத்யூ பாட்ஸ், ஜேகப் பெத்தேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை லியம் டவ்சன் பெற்றார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi