மும்பை: இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையே 2 போட்டிகள் கொண்ட முதல் டெஸ்ட்டில் இந்தியா வென்ற நிலையில் 2வது போட்டி வரும் 20ம் தேதி டிரினிடாட்டில் தொடங்க உள்ளது. இதனிடையே தேர்வு குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் அகர்கர் வெஸ்ட்இண்டீஸ் செல்ல உள்ளார்.
முதல் டெஸ்ட் 3 நாட்களில் முடிவடைந்ததால் இரண்டு நாட்கள் விடுமுறையை அனுபவித்த இந்திய அணி இன்று டிரினிடாட் செல்கிறது. அயர்லாந்தின் பயணத்திற்கான அணியை இறுதி செய்வதற்கு முன் ரோகித் மற்றும் ராகுலுடன் அகர்கர் பேசுவார் என்று தகவல்கள் கூறுகின்றன.