Wednesday, June 18, 2025
Home செய்திகள் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதல் டி.20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதல் டி.20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி

by MuthuKumar

செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்: வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஒரு நாள் போட்டி தொடரை 3-0 என இங்கிலாந்து கைப்பற்றிய நிலையில், அடுத்ததாக 3 போட்டி கொண்ட டி.20 தொடரின் முதல் போட்டி செஸ்டர் லெஸ்ட்ரீட்டில் நேற்றிரவு நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர் 59 பந்தில் 96 ரன் விளாசினார். ஜேமி ஸ்மித் 38, ஜேக்கப் பெத்தேல் 23 ரன் அடித்தனர்.

பின்னர் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் எவின் லூயிஸ் 39, ரோஸ்டன் சேஸ் 24, ஜான்சன் சார்லஸ் 18, ரொமாரியோ ஷெப்பர்ட், ஜேசன் ஹோல்டர் தலா 16, ரஸ்சல் 15 ரன் அடித்தனர். 20 ஓவரில் வெஸ்ட்இண்டீஸ் 9 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களே எடுத்தது. இதனால் 21 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. அந்த அணியின் பவுலிங்கில் லியாம் டாசன் 4 விக்கெட் எடுத்து ஆட்டநாயகன் விருது பெற்றார். அடில் ரஷித், மேத்யூ பாட்ஸ் தலா 2 விக்கெட் எடுத்தனர். 2வது போட்டி நாளை நடக்கிறது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi