போர்ட் ஆப் ஸ்பெயின்: தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி.20 போட்டிகளில் ஆடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென்ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 357 ரன்னும், பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 233 ரன்னும் எடுத்தன. தொடர்ந்து 124 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய தெ.ஆப்ரிக்கா 4வது நாளில் விக்கெட் இழப்பின்றி 30 ரன் எடுத்திருந்தது. கடைசி நாளான நேற்று தொடர்ந்து ஆடிய அந்த அணி 29 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 173 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது.
டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 68, டோனி டி ஜோர்ஜி 45, மார்க்ரம் 38 ரன் எடுத்தனர்.பின்னர் 298 ரன் இலக்குடன் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் பிராத் வெயிட் டக்அவுட் ஆக மிகைல் லூயிஸ் 9, கீசி கார்டி 31, ஜேசன்ஹோல்டர் 31, கவேம் ஹாட்ஜ் 29 ரன்னில் வெளியேறினர். அதிகபட்சமாக அலிக் அத்தானாஸ் 92ரன் எடுத்தார். 56.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு வெ.இண்டீஸ் 201 ரன் எடுத்திருந்தபோது ஆட்டம் டிராவில் முடித்துக்கொள்ளப்பட்டது. இரு இன்னிங்சிலும் சேர்த்து 8 விக்கெட் எடுத்த கேசவ் மகாராஜ் ஆட்டநாயகன் விருது பெற்றார். 2வது மற்றும் கடைசி டெஸ்ட்பிராவிடன்சில் வரும் 15ம்தேதி தொடங்குகிறது.