சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்களில் இன்று ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டப் பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யும் வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 கிமீ வேகத்தில் வீசும். கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை இன்று பெய்யும். அதனால் அந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.
மேலும், 29ம் தேதி முதல் ஜூலை 3ம் தேதி வரையில் தமிழகத்தில் மழை நீடிக்கும் வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் ஓரளவுமேககூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இன்று, அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி முதல் 102 டிகிரிவரை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.