சென்னை: வடக்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகி, அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு-மத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது. மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு காரணமாக 4-ந் தேதி (இன்று) முதல் 7-ந் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
4-ந் தேதி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசியிலும், 5-ந் தேதி கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும், 6-ந் தேதி கோவை, நீலகிரி மாவட்டங்களிலும், 7-ந் தேதி கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வடக்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகி, அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு-மத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
மேலும் இது அடுத்த இரு தினங்களில் ஆந்திர மற்றும் ஓடிஷா கரையை நோக்கி நகரும் என்று தெரிகிறது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழ்நாடு. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, சென்னை உட்பட பல்வேறு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. மேலும், அடுத்த ஐந்து நாட்களில் ஒடிசாவில் கனமழை முதல் மிகக் கனமழையுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.