கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில், பூர்பா பர்தமான் மாவட்டத்தில் ரஜோவா கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு 8.30க்கு வீடு ஒன்றில் திடீரென அடுத்தடுத்து இரண்டு முறை குண்டுவெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயமடைந்தார். தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்தனர். வீட்டில் எரிந்த நிலையில் இருந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. மேலும் காயமடைந்த ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விசாரணையில் நாட்டு வெடிகுண்டுகளை தயாரிப்பதற்காக உள்ளூரை சேர்ந்த சமூக விரோதி ஒருவர் கும்பலை அழைத்து வந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மே.வங்கம்: குண்டு வெடித்து ஒருவர் பலி
0