இந்திய அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதனை தொடர்ந்து இந்திய அணி முதலில் களமிறங்க உள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில், விராட் கோலி, ரோஹித் ஷர்மா இல்லை. சஞ்சு சாம்சன், அக்சர் படேல் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யா தலைமை தாங்குகிறார்.