புதுடெல்லி: வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் நிகோலஸ் பூரன் (29) அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீசை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் நிக்கோலஸ் பூரன், டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் அநாயாசமாக அரை சதங்களை விளாசி சாதனை படைத்தவர். ஐபிஎல்லில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக ஆடி வருபவர். இவர், அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகி, ஐபிஎல் போன்ற பிரான்சைஸி கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்தப் போவதாக அவர் கூறியுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஹென்ரிச் கிளாசன் (தென் ஆப்ரிக்கா), சமீபத்தில் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரும், உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பிரான்சைஸி கிரிக்கெட் போட்டிகளில் ஆடப்போவதாகவும், தனிப்பட்ட வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்கப் போவதாகவும் கூறியிருந்தார். அதே முடிவை நிகோலஸ் பூரனும் எடுத்திருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பூரன், வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக, 106 டி20 போட்டிகளில் ஆடி, 2275 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.