புதுடெல்லி: மேற்குவங்கத்தில் தபால் நிலையத்தில் ரூ.4 கோடி மோசடி செய்ததாக புகார் கூறப்பட்ட தபால் அதிகாரி வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி ரூ.5.25 லட்சம், 6 லட்சம் வங்கி புத்தகங்களை பறிமுதல் செய்தது. மேற்கு வங்க மாநிலம் பூர்பா மேதினிபூர் மாவட்டத்தில் மொய்னா காவல் நிலையத்தில் அந்த பகுதியின் சப் போஸ்ட் மாஸ்டர் லட்சுமண் ஹெம்ப்ராம் ரூ.4 கோடி மோசடி செய்ததாக புகார் கொடுக்கப்பட்டது.
தபால் நிலையத்தில் கணக்கு வைத்திருப்பவர்களின் கையொப்பத்தை போலியாக உருவாக்கி, அதே கணக்கு வைத்திருப்பவர்களின் முதிர்வுத்தொகையை மாற்றி அமைத்து தனது கணக்கில் எடுத்துக்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து சப் போஸ்ட் மாஸ்டர் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தி ரூ5.25 லட்சம் ரொக்கம், ரூ. 6 லட்சம் வங்கி டெபாசிட்களுக்கான ரசீதுகளை பறிமுதல் செய்தது.