சென்னை: நல்வாழ்வு நடைப்பயிற்சி திட்டத்தை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். நீரிழிவு, ரத்த அழுத்தம் ஆகியவற்றிற்கு நடை, உடற்பயிற்சிதான் தீர்வு என மருத்துவ உலகம் முன்வைக்கிறது.