சென்னை: பள்ளிகளுக்கு நலத்திட்டங்களை பெற்று வழங்கியவுடன், அதை எமிஸ் தளத்தில் முழுமையாக பதிவேற்றம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வி இணை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். முதன்மை கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர்களுக்கான இணையவழிக் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
இதில் பள்ளிக்கல்வி இணை இயக்குனர் கலந்து கொண்டு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். குறிப்பாக பள்ளிகளுக்கு நலத்திட்டங்கள் பெற்று வழங்கிய விவரம் அவ்வப்போது எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என பலமுறை அறிவுறுத்தியும் இதுவரை 100 சதவீதம் முழுமையாக பதிவேற்றம் செய்யவில்லை. இதனால் அரசுக்கு சரியான அறிக்கையை சமர்ப்பிக்க இயலவில்லை. எனவே இதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.