சென்னை: சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலை தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘நீங்கள் தமிழ்நாட்டுக்கு வரும்போது தகவல் மட்டும் சொல்லுங்க. நான் கட்டாயம் உங்களை சந்திக்கிறேன். எல்லோருக்கும் வாழ்த்து சொன்னனு சொல்லிடுங்க’ என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த வீரமுத்துவேல், ‘நீங்கள் கால் பண்ணது ரொம்ப சந்தோஷம். உங்களோட சர்வீஸ் எல்லாம் ரொம்ப பிடிச்சி இருக்கு சார். உங்ககிட்ட பேசுனது ரொம்ப சந்தோஷம் சார்’ என்று தெரிவித்தார்.