சென்னை: அரசு துறைகளிலேயே அறநிலையத்துறையின் நிகழ்ச்சிகளில் தான் அதிகம் பங்கேற்றிருக்கிறேன் என திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். அறநிலையத்துறை சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் 2326 இணையர்களுக்கு திருமணம். திராவிட மாடல் ஆட்சியில் 3177 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி வைத்துள்ளோம். பக்தர்கள் போற்றக்கூடிய அரசாக தொடர்ந்து சாதனை படைத்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.