சென்னை: விவசாயிகள் நலன் கருதி வருவாய் பெருக்கும் விதமாக கால்நடை விற்பனைக்காக இணையதளம் உருவாக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கால்நடைகளை நல்ல விலைக்கு உரிய நேரத்தில் விற்க சிறப்பு வசதியாக இணையதளம் உருவாக்கப்படும். இணையதளத்தின் மூலம் சந்தை விலை நிலவரம், இருப்பு நிலவரம் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ள முடியும். தகவல்களை அறிந்து உரிய விலைக்கு கால்நடைகளை விற்று பொருளீட்டும் வசதி ஏற்படுத்தப்படும். இணையதளம் உருவாக்கும் பணி கால்நடை மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
கால்நடை விற்பனைக்காக இணையதளம்: தமிழ்நாடு அரசு
0