சென்னை: வானிலையை அறிய ரூ.50 கோடி மதிப்பீட்டில் 2 சி-பேண்ட் டோப்ளர் ரேடார் வாங்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. வானிலை முன்னறிவிப்பை வலுப்படுத்துவதற்காக மாநில பேரிடர் மேலாண்மைத்துறை 2 ரேடார்களை வாங்குகிறது. வானிலை முன்னறிவிப்பை வலுப்படுத்த ராமநாதபுரம், ஏற்காடு ஆகிய இடங்களில் ரேடார்களை பொருத்த திட்டமிட்டுள்ளது.