ஸுஹாய்: சீனாவில் நடந்த டபுள்யு.டி.ஏ எலைட் டிராபி டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், பிரேசில் வீராங்கனை ஹடாத் மாயா சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை கின்வென் ஸெங்குடன் (21 வயது, 18வது ரேங்க்) நேற்று மோதிய ஹடாத் மாயா (27 வயது, 19வது ரேங்க்) 7-6 (13-11), 7-6 (7-4) என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை கைப்பற்றினார். இரண்டு செட்களுமே டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்து கடும் போராட்டமாக அமைந்த இப்போட்டி 2 மணி, 51 நிமிடத்துக்கு நடந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பு சீசனில் அதிக நேரத்துக்கு நீடித்த நேர் செட் போட்டியாகவும் இது அமைந்தது. கடின தரை மைதானங்களில் மாயா வென்ற முதல் பட்டம் இது.
டபுள்யு.டி.ஏ எலைட் டிராபி: ஹடாத் மாயா சாம்பியன்
previous post