கேரளா: வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். அவரது மனைவி டி.கே.கமலா 33,000 ரூபாயை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அனுப்பினார். வயநாட்டின் சூரல்மலை, முண்டக்கை, பூஞ்செரிமட்டம் உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவால் கடும் பாதிக்கப்பட்டுள்ளது. வயநாட்டை பழையபடி மீட்டெடுக்க கேரள மக்கள் அனைவரும் தோளோடு தோள் நிற்போம்.