திருவனந்தபுரம்: வயநாட்டில் நிலச்சரிவு பாதித்த சூரல்மலை, முண்டக்கை மற்றும் அட்டமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒரு மாதத்திற்குப் பின் நேற்று பள்ளிகளுக்கு சென்றனர். வயநாட்டில் கடந்த ஜூலை 30ம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 350க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலச்சரிவில் வெள்ளார்மலை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் முண்டக்கை அரசு தொடக்கப்பள்ளி ஆகியவை இருந்த இடம் தெரியாமல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்தப் பள்ளிகளில் படித்த ஏராளமான மாணவ, மாணவிகளும் நிலச்சரிவில் உயிரிழந்தனர். இந்நிலையில் ஒரு மாதத்திற்குப் பின்னர் முண்டக்கை, சூரல்மலை மற்றும் அட்டமலை பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் நேற்று இந்தப் பள்ளிகளுக்கு சென்றனர். மாணவர்களுக்கு கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.