வயநாடு: வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் பள்ளிகள் செயல்பட தொடங்கின. ஒரு மாதத்திற்கு பின் தொடங்கப்பட்ட பள்ளிக்கு சிறப்பு பேருந்துகள் மூலம் மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் மனதை மாற்றி, இதமான சூழலை உருவாக்க ஆசிரியர்கள் முயற்சியை மேற்கொண்டுள்ளனர். பரிசுகள், மலர்களை கொடுத்து மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.