திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.6 லட்சம் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. நிலச்சரிவால் படுகாயமடைந்த நபர்களுக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும். நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6,000 வாடகை உதவித் தொகையாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.