சென்னை: கேரளாவிலுள்ள வயநாட்டில் சமீபத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து 3 கிராமங்கள் மண்ணில் புதைந்தன. 400க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். 350க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வயநாட்டில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வரும் நிலையில், பல்வேறு திரையுலகைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் கேரளாவுக்கு நிதியுதவி வழங்கி வருகின்றனர். அந்தவகையில் தமிழ்ப் படவுலகைச் சேர்ந்த நடிகைகள் மீனா, சுஹாசினி, குஷ்பு, லிசி ஆகியோர் கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து, ரூ.1 கோடி நிதி வழங்கினர்.