கேரளா: வயநாடு மீட்புப் பணியில் மனிதர்களுடன் மோப்ப நாய்களும் பணியாற்றுவது மனதை நிறைக்கிறது: என்று பினராயி விஜயன் கூறியுள்ளார். மீட்புப் படையில் சிறப்புப் பயிற்சி பெற்ற நாய்கள் பேருதவி புரிந்து வருகின்றன. மோப்ப நாய்களான மாயா, மர்பி, ஏஞ்சல் ஆகியோரால் பல சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இந்திய ராணுவத்தில் காடாவர் நாய்களான ஜாக்கி, டிக்ஸி, சாரா ஆகியனவும் சிறப்பாக பணியாற்றுகின்றன. கர்நாடக, தமிழக காவல்படைகளின் நாய்களும் பேரழிவை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.