வயநாடு: வயநாடு நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன மேலும் 206 பேரை தேடும் பணி தீவிரமடைந்து உள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். ட்ரோனில் ரேடார் பொருத்தப்பட்டு 206 பேர் தேடப்பட்டு வருவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல் தெரிவித்தார். நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என்றும் கூறியுள்ளார்.